விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு திடீர் ஆய்வு
![]()
விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு திடீர் ஆய்வு – முக்கிய வழக்குகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை
உளுந்தூர்பேட்டை, மார்ச் 3:
விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது முக்கிய வழக்குகளின் கோப்புகள், அவற்றின் முன்னேற்ற நிலை, ஒழுங்கு மற்றும் சட்டநடவடிக்கை செயல்பாடு ஆகியவை விரிவாக பரிசோதிக்கப்பட்டன. மேலும் ஆயுத களஞ்சியம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
சில வழக்குகளில் பதிவுகள் முறையாக எழுதப்படாதது குறித்து உட்கோட்டை டிஎஸ்பி அசோகனிடம் டிஐஜி கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் (எஸ்பி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆய்வு விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட எஸ்பியும் அரவிந்த் அவர்கள் உடனே புறப்பட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வில் கலந்து கொண்டார்.
இரு அதிகாரிகளும் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு மற்றும் பராமரிப்பு முறைகளை துல்லியமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத் தொகைகள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனக் குறிப்பிட்டனர். கொடுங்காயம் என சான்றளிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகின்றது.
அத்தகைய நிவாரணத் தொகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக கிடைக்க காவல் நிலையங்கள் தேவையான ஆவணப்பதிவுகளை செய்து உதவ வேண்டும் என்றும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விளம்பரப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பிரீத்தா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜாபர், மற்றும் போலீசர்கள் உடன் இருந்தனர்.

