ஈரோடுகருங்கல்பாளையத்தில்மாபெரும்தூய்மைபணி
![]()
ஈரோடு
காவிரி நதியைப் பாதுகாக்கக் கரம் கோர்த்த தன்னார்வலர்கள்: ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாபெரும் தூய்மைப் பணி நடைபெற்றது.
ஈரோடு: நதிகளின் புனிதத்தைப் பேணிக் காக்கும் வகையில், ‘நம்மில் இருந்து துவங்கட்டும் மாற்றம்’ என்ற எழுச்சிமிகு முழக்கத்துடன் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் மாபெரும் தூய்மைப் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. ஈரோடு காவிரி ஆரத்திக் குழு, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், இலஞ்சி சமூக நல இயக்கம், பசுஞ்சோலை நண்பர்கள், பள்ளிபாளையம் பசுமை நண்பர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த நதி சீரமைப்புப் பணியை முன்னெடுத்தனர். கருங்கல்பாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய படித்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆற்றுப் பகுதிகளில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகள் அனைத்தும் இந்தப் பணியின் மூலம் முழுமையாக அகற்றப்பட்டன. நதிகளின் தூய்மையே நாட்டின் தூய்மை என்பதை உணர்த்தும் விதமாக நடைபெற்ற இந்த உன்னதப் பணியில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள் எனப் திரளானோர் கலந்துகொண்டு நதி பாதுகாப்புப் பணியில் கரம் கோர்த்தனர். இன்றைய இந்தத் தூய்மைப் பணியின் மூலம் காவிரி ஆற்றின் படித்துறைப் பகுதிகள் பொலிவு பெற்றுள்ளதோடு, பொதுமக்களிடையே நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

