தமிழ்த்தாய்படத்திற்குமு.பெ.சாமிநாதன்மலர்தூவிமரியாதை

Loading

பருத்திபட்டு பகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்த்தாய் திருவுறப் படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சா.மு.நாசர் ஆகியோர் மலர் தூவி மரியாதை :
திருவள்ளூர் பிப் 22 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, பருத்திபட்டு பகுதியில் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்த்தாய் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அப்பொழுது  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது :
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளான்று பன்னாட்டு தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.உலகில் பயன்பாட்டில் உள்ள பல மொழிகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மொழி மற்றும் பண்பாடு பன்மையை காக்கும் விதத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இசைத்தமிழ் என்னும் நூலில் தாய்மொழி என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் தாய்மொழி என்றால் தாயார் புகட்டிய மொழி. தாயின் உடலில் இருந்துதான் உடல் உண்டாகிற்று அவள் ஊட்டிய அமுதத்தில் இருந்துதான் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களில் இருந்து நமக்கு அறிவு ஆரம்பித்தது.
ஒரு தமிழ் குழந்தை பேச்சை எழுவதற்கு முன்னாள் பெற்ற தாய் தந்தை இழக்க நேர்ந்தால் தெலுங்கு தாயரால் வளர்க்கப்பட்டு அந்த செவிலித்தாயின் குழந்தைக்கு தெலுங்கிலே பேச விடுவாளானால், அந்த குழந்தைக்கு தாய் மொழி தெலுங்கு தான் மொழியில் சொன்னால் தான் குழந்தை அறிந்து கொள்ள முடியும் என்று தாய் மொழிக்கான விளக்கத்தை அளித்திருக்கிறார். நாமும் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் என்றும் பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்போம்.என்று கூறினார்.  தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது :

தமிழ் மொழியில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆய்த எழுத்து 1 என உயிரையும் மெய்யும் சேர்ந்து (உடல்) கூறிய மொழி நம் தமிழ்மொழி ஆகும். உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய மொழி தமிழ் மட்டும் தான். தஞ்சாவூர் பெரியகோவில் தமிழ் எழுத்துகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டுயிருக்கிறது. பெருமை மிகுந்த தமிழ் மன்னர்கள் கடல் தாண்டி ராஜியங்களை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இவ்வாறு பெருமை வாய்ந்த தமிழ் மொழி மென்மேலும் வளர வேண்டும் என கூறினார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.இராஜாராமன்,ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார்,மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், ஆணையர் ஆவடி மாநகராட்சி ரா.சரண்யா,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (திருவள்ளூர்) வே.ரேவதி, கல்லூரி தலைவர் சி.குஞ்சிதபாதம், கல்லூரி நிர்வாக இயக்குநர் சு.கு.திருக்குமரன், கல்லூரி முதல்வர் அனிதா ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares