அங்கன்வாடி உதவியாளர் நேரடியாக பணி நியமனம்
![]()
தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.ஊதியவிவரம்-தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.7700, பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.7700 -24200 என்ற விகிதம். அங்கன்வாடி பணியாளர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது-வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும் 25 முதல் 35 வயது வரை, விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி, எஸ்டி வகுப்பினர். வயது 25 முதல் 40 வரை (35+5 =40)மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை(35+3=38)தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ. 4100 பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.4100 – 12500 என்ற விகிதம் அங்கன்வாடி உதவியாளர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது-வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும் 20 வயது முதல் 40 வரை, விதவைகள்/ஆதரவற்றபெண்கள்/எஸ்சி/
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர், அதே கிராம ஊராட்சிகுட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாய்த்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு (அ) அருகிலுள்ள வார்டு (அ) மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம், திட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சானறிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பென் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு சான்றிதழ், குடும்ப அட்டை,ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் . விதவை / கணவரால் கைவிடப்பட்வர் / ஆதரவற்ற பெண் (தாய், தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும் நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

