பாஜக பூத்கமிட்டிநிர்வாகிகளுடன்செல்வம்ஆலோசனை

Loading

திருவள்ளூர் தொகுதியில் உள்ள பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் திருவள்ளூர் தொகுதி தேர்தல் பிரச்சார குழு தலைவர் வினோஜ் பி செல்வம் ஆலோசனை :
திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர்  தொகுதியில் உள்ள பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் திருவள்ளூர் தொகுதி தேர்தல் பிரச்சார குழு தலைவர் வினோஜ் பி செல்வம் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அஸ்வின்குமார்,,  பொறுப்பாளர்கள் ராஜ்குமார், கருணாகரன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வினோஜ் பி செல்வம்,  தேர்தல் ஜுரம் அனைத்து இடங்களிலும் தொடங்கி விட்டது, பாரதிய ஜனதா அக்கா கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்து கட்சியை பலப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜனவரி 23 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்குப் பின்பு பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது. இந்த கூட்டணி பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, மேலும் பல கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.  தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி  தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை போதை தலைநகரமாக மாறி வருகிறது.  வியாபாரிகளை ரவுடிகளை வைத்து வசூல் வேட்டையில் திமுக ஈடுபடுவதாகவும் முதலமைச்சர் கையில் ரத்தம் படிந்துள்ளது  என்று வினோத் பி.செல்வம் குற்றம் சாட்டினார்.
தவெ கவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவா இரண்டாம் ஆண்டு துவக்க விழாவா என்பது கூட தெரியாமல் அக்கட்சி தலைவர் விஜய் பேசி வருகிறார் தமிழில் இரண்டாம் ஆண்டு எனவும் ஆங்கிலத்தில் மூன்றாம் ஆண்டு எனவும் மாறி மாறி கட்சி தொடங்கிய ஆண்டையே தெரியாமல் விஜய் இருக்கிறார் என்றும், சினிமா வசனம் போன்று திருக்குறள் பேசுகிறார்,
திருக்குறளுக்கு அர்த்தமோ அல்லது எத்தனை திருக்குறள் மொத்தமாக உள்ளது என்பது கூட தெரியாதவர் விஜய் என்றும், நடிகராக இருந்து நடித்து அரசியலில் ஜெயித்து விடலாம் என்று எண்ணுகிறார் விஜய் இன்னொரு எம்ஜிஆர் பிறந்துவர முடியாது, எம்ஜிஆர் மக்கள் பிரச்சினையை எவ்வாறு பேசினார்கள்? எவ்வாறு அணுகினார்கள் என்பது கூட தெரியாமல் மக்கள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அரசியல் மேடைகளில் கூட நடிகராக மாறி குத்தாடம்  ஆடுகிறார், அவரால் எந்த நன்மையும் நடைபெறப் போவதில்லை என்றும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா கலாச்சாரத்தை பற்றி கூட விஜய் பேசவில்லை இதுவரை  மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை கூட சொல்லாமல் இதுவரை கட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
0Shares