உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் உதவி

Loading

புதுச்சேரி ஜன-27
 புதுச்சேரியில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் உதவி
புதுச்சேரியில்  காலை முதல் இரவு வரை இடைவிடாமல் பெய்த கனமழை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசை வீடுகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகளுக்கு நேரடியாக தார்பாய்களை வழங்கி உடனடி நிவாரண உதவி செய்தார்.
மேலும், பொதுமக்களின் சிரமங்களை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு மூலம் கூடுதல் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி தெரிவித்தார்.
 உடன் கிளை செயலாளர் சங்கர நாராயணன், அகிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares