ஈரோடு நேதாஜி சந்தையில்1600 பேருக்கு அன்னதானம்
![]()
ஈரோடு
ஈரோடு நேதாஜி சந்தையில் 13-வது மாதம் தை அமாவாசையன்று 1600 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர். தை அமாவாசையை முன்னிட்டு, ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 13-வது மாதமாகச் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மணியன் மில் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பவர் கனெக்ட் உரிமையாளர் பாலாஜி, சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் கமிட்டியின் மகளிர் அணியினர் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்டோருக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில், அறக்கட்டளை நிர்வாகிகள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

