புதுச்சேரி பொறியாளருடன் எம்எல்ஏஅனிபால்கென்னடி

Loading

புதுச்சேரி ஜன-19
புதுச்சேரி தலைமை பொறியாளருடன் எம்எல்ஏ அனிபால் கென்னடி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் அவர்களை நேரில் சந்தித்து, உப்பளம் தொகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, துறைமுகம் வரை செல்லும் டாக்டர் அம்பேத்கர் சாலை வாய்க்கால் பணிகளை விரைந்து முடித்து வழங்க வேண்டும் என்றும், வீரன் கோவில் நேதாஜி நகர்-2 தெற்கு பகுதியில் புதிய வாய்க்கால் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், உப்பளம் தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் பழுதடைந்த தண்ணீர் குழாய்களை மாற்றி, அதன்பின்னர் சாலைகளை புதிதாக அமைத்து வழங்க வேண்டும் என்றும், புனித சவேரியார் ஆலயம் எதிரே சேதமடைந்த பாதாள வடிகால் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமை பொறியாளர் அவர்களிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து வரும் வாரங்களில் பொதுப்பணித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி, உரிய தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் சந்துரு, ராகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0Shares