காளிங்கராயர் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்தார்

Loading

ஈரோடு
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் புதுப்பிக்கப்பட்ட காளிங்கராயர் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
பவானி ஆற்றிலிருந்து பாசனத்திற்காக 743 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் நினைவைப் போற்றும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாளையத்தில் தொடங்கி அக்ரகாரம், ஈரோடு, மொடக்குறிச்சி, கணபதி பாளையம், பாசூர், கருமண்டம்பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் இக்கால்வாய் மூலம் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் எனப் பல பயிர்கள் செழித்து வருகின்றன.
வெள்ளோட்டில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட இச்சிலை, தற்போது ராசா கோயில் அருகே புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இன்றைய திறப்பு விழாவில், தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், திமுக நிர்வாகிகள் மற்றும் காளிங்கராயன் வாரிசுதாரர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
0Shares