30அடி மண்சுவர் இடிந்துவிழுந்து மண்ணில்புதைந்தனர்

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா  பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதனட்டி பகுதியில் வீடு கட்டும் பணிக்காக மண் இடிக்கும் பணியில் மேற்குவங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் 22 நசீர் 33 உஸ்மான் 36 ஆகிய தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது 30 அடி மண் சுவர் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்து விட்டனர்.
தகவல் அறிந்த அருவங்காடு காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பனியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக ஒரு நபரை உயிருடன் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் அப்பொழுது கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
மேலும் சில மணி நேரம் போராடி மண்ணில் புதைந்து கிடந்த மற்ற இருவரையும் மீட்டனர் ஆனால் அவர்கள் ஏற்கனவே  உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அருவங்காடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை .
0Shares