வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெரும்
![]()
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம் : திருவள்ளூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு :
திருவள்ளூர் டிச 31 : வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி தான் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம், அப்போது விடுபட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் முன்புள்ள மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்டு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது. தமிழகத்தில் 179 ஆவது தொகுதியாக திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் பொதுமக்களை சந்திக்கிறேன். அதோடு திமுக கூட்டணி தான் பலமான கூட்டணி என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணியினர் ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒவ்வொரு விதமாக கூறி வரும் நிலையில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அதிமுகவை கூட்டணி இல்லாத கட்சியென மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு வருகிறார். அதிமுக தலைமையில் அமையும் கூட்டணிதான் வெற்றி கூட்டணியாகும்.கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதோடு, ஒரே ஆண்டில் மட்டும் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். அதேபோல், 7 சட்டக்கல்லூரிகள், 27 தொழில்நுட்ப பயிலகம், 68 கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தோம். அதேபோல், அதிமுக ஆட்சியில் 248 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டதோடு, 137 நடுநிலைப்பள்ளிகள், 1079 உயர் நிலைப்பள்ளிகள், 604 மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று எந்த திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை.

