சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையம்

Loading

திருநின்றவூர் தனியார் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையம் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான உதவி மையத்தினையும், ஆவடி புனித ஜோசப் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான உதவி மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக கேட்டறிந்து, அப்படிவங்களை கணினிமயமாக்கல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறித்தினார்.
தொடர்ந்து, சென்னை பெருநகர மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தலைமையில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு புதிய வாக்காளர்கள் படிவங்களை வழங்கியவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
இதில் வாக்காளர் பதிவு அலுவலரும் ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் மாரிசெல்வி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் செல்வி. ஜீவிதா (திருநின்றவூர் நகராட்சி ஆணையர்), கண்ணன் (ஆவடி வட்டாட்சியர்), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் லட்சுமணகுமார் (உதவி வருவாய் அலுவலர்), டாலி (அம்பத்தூர் வட்டாட்சியர்), வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares