‘ஹபிபிஅரேபியன்நைட்ஸ்2026புத்தாண்டுவிழா
![]()
விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ரேடிசன் ப்ளூ ஹோட்டல் நடத்தும் ‘ஹபிபி – அரேபியன் நைட்ஸ்’ பிரம்மாண்ட 2026ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள்..
விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும், ஹோட்டல் ரேடிசன் ப்ளூவும் இணைந்து, 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘ஹபிபி – அரேபியன் நைட்ஸ்’ என்ற பிரம்மாண்ட விழாவை வரும் டிசம்பர் 31-ம் தேதி நடத்துகின்றது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ரேடிசன் ப்ளூ உணவகத்தில் நடைபெற்றது. இதில் விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கங்கா தேவராஜன் கலந்துகொண்டு விழா பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது..
இந்த விழாவின் சிறப்பம்சமாக, அலங்காரங்கள் முதல் உணவு வரை அனைத்தும் அரேபிய மற்றும் இந்திய கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும். விழாவில் மூன்று சிறந்த டிஜேக்கள் ரஷ்யாவிலிருந்து வரும் பெல்லி நடனக் கலைஞர்கள் மற்றும் கோயம்புத்தூரின் ‘ஷீ யூனிட்’ குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பார்வையாளர்களுக்கு அரேபிய மற்றும் இந்திய உணவுகள் கலந்த இரவு உணவு, மற்றும் மதுபானங்கள் தடையின்றி வழங்கப்படும். குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் தம்பதிகள் என அனைவரும் மகிழும் வகையில் இந்த விழா அமையும். கோயம்புத்தூரில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்
மேலும், விருந்துக்கு பின்னர் வாகனம் ஓட்ட முடியாத விருந்தினர்களுக்காகத் தனியார் டாக்ஸி நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பான பயண வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு கோஷங்களுடன் இந்த விழா நிறைவடையும் என தெரிவித்தார்.

