தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கு ஹென்றி கடிதம்
![]()
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கூலிப்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கு பெயிரா தலைவர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதி உள்ள கடிதத்தில்..
மேற்கண்ட எமது FAIRA கூட்டமைப்பின் புரவலர் உறுப்பினர் மற்றும் ஸ்ரீமூகாம்பிகை ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.P.தண்டபாணி மற்றும் அவரது நண்பர் மனோகர் ஆகியோர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் அமைந்துள்ள தீபம் நகருக்கு அருகில் அன்னபூரணீஸ்வரி நகர் என்கின்ற மனைப்பிரிவினை உருவாக்கி மனைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். மேற்கண்ட மனைப்பிரிவில் ஒரு சில மனைகளை விற்பனை செய்யாமல் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வைத்துக் கொண்டுள்ளார். மேற்கண்ட P.தண்டபாணி அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்த மனைகளுக்கு அருகில் துர்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கமல், முத்துக்குமார் ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கமல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உருவாக்கும் மனை பிரிவிற்கு வழிப்பாதை வேண்டி, P.தண்டபாணி அவர்களை அணுகி அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக அன்னபூரணீஸ்வரி நகரில் வைத்திருக்கும் மனைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் P.தண்டபாணி அவர்கள் தனது சொந்த தேவைக்காக வைத்துள்ள மனைகளை விற்பனை செய்வதற்கு விருப்பம் இல்லையென தெரிவித்து விற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கமல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர்கள் P.தண்டபாணி மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் இருந்து வந்துள்ளனர். தினமும் காலை நேரத்தில் P.தண்டபாணி அவர்கள் தனது அன்னபூரணீஸ்வரி நகர் மனை பிரிவிற்கு தொடர்ந்து சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்ததை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். வழக்கம் போல் நேற்று 26.12.2025 ஆம் தேதி காலை 09:00 மணியளவில் P.தண்டபாணி அவர்கள் தனக்கு சொந்தமான அன்னபூரணீஸ்வரி நகர் மனை பிரிவை அவரது மேலாளர் தவமணி மற்றும் நண்பர் செல்வராஜ் ஆகியோருடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, P.தண்டபாணி அவர்களிடம் மனைகளைக் கேட்டு கிடைக்கப்பெறாமல் மிகுந்த கோபத்துடனும் அவரை பழிவாங்க வேண்டும் என்கின்ற கொடூர எண்ணத்துடனும் காத்திருந்த கமல், முத்துக்குமார் மற்றும் அவரின் நண்பர்கள் ஆடையூரை சேர்ந்த ஜெயா (எ) ஜெயபிரகாஷ், ரஜினி மற்றும் இவர்களுடன் பெயர் தெரியாத இரண்டு நபர்களும் என பெரும் கும்பலாக P.தண்டபாணி அவர்களை நோக்கி வந்துள்ளார்கள். ஜெயா என்பவர் திமுக தேவதாஸ் அவர்கள் கைப்பேசி இணைப்பில் இருப்பதாகவும் அவருடன் பேசுமாறு P.தண்டபாணி அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார்கள். அதற்கு P.தண்டபாணி அவர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து தேவதாஸ் ஜெயாவிடம் போனை ஸ்பீக்கரில் போடுமாறு கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து திமுக தேவதாஸ் அவர்கள் P.தண்டபாணி அவர்களை மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அச்சில் எழுத முடியாத தரக்குறைவான நாகூசும் வார்த்தைகளை பயன்படு த் தி என்னுடன் போனில் பேச மாட்டாயா? ஓத்தா நீ பெரிய புடுங்கியா உன் சாவு என் கையில்தான் இருக்கிறது என கூறிக்கொண்டே ஜெயா போடுற அவனை என போனில் ஆவேசத்துடன் கத்தியுள்ளார். உடனே ஜெயா சட்டென்று ஓத்தா தேவிடியா மகனே என ஆவேசத்தோடு கத்திக் கொண்டே ஓழிந்து போடா என தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து P.தண்டபாணி அவர்களின் கழுத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த போனபோது P.தண்டபாணி அவர்கள் சுதாகரித்து கொண்டதால் கத்தி அவரது இடது காதை குத்தி கிழித்ததால் அவரின் காது அறுந்து பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனிருந்த ரஜினி என்பவன் ஆக்ரோஷத்துடன் நாகூசும் தகாத வார்த்தைகளை கூறியபடி ஆக்ரோஷமாக தனது கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு P.தண்டபாணி அவர்களின் முதுகில் வெட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து கமல் மற்றும் முத்துக்குமாருடன் வந்த பெயர் தெரியாத நபர்களும் இரும்பு ராடு மற்றும் மரக்கட்டையால் P.தண்டபாணி அவர்களை மிகக் கடுமையாக தாக்கியதால் தலை, கை கால் முகம் என உடல் முழுவதும் பலத்த காயமும் மற்றும் அவரின் இடது கை முறிவு அடைந்த நிலையிலும் கொலைகார கும்பல் P.தண்டபாணி அவர்களை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் தங்களை நோக்கி ஓடி வருவதை அறிந்த கொலைகார கும்பல் P.தண்டபாணி அவர்களை நோக்கி நாகூசும் தகாத வார்த்தைகளை கூறி என்றைக்கு இருந்தாலும் உன் சாவு எங்கள் கையில் தாண்டா என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து அகன்று சென்றுள்ளது.
இந்த கொடூர தாக்குதலினால் பலத்த காயங்களுடன், ரத்தம் வழிந்தோட மிகுந்த வேதனையால் வலியில் துடித்துக் கொண்டிருந்த தண்டபாணி அவர்களை அவரது மேலாளர் தவமணி மற்றும் செல்வராஜ் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்துள்ளனர். மருத்துவர்கள் மேற்கண்ட கூலிப்படையினரின் தாக்குதலுக்குள்ளான தண்டபாணி அவர்களின் அறுந்த காதிற்கு தையல் போட்டும், முகத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் ஏற்பட்ட ரத்த காயத்திற்கும், இடது கை முறிவு மற்றும் உடைந்து நிலையில் இருந்த பற்க்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
மேற்கண்ட வகையில் நடைபெற்ற சம்பவத்திற்கு காரணமான நபர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையின் தலைவன் திமுக தேவதாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி P.தண்டபாணி அவர்கள் 26.12.2025 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட உயர்திரு காவல் உதவி ஆய்வாளர், கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவின் நகல் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் P.தண்டபாணி அவர்கள் மேற்கண்ட நபர்கள் மற்றும் கூலிப்படையினரால் கொடூர கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை முனைவர்களிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக கருதப்படும் தமிழ்நாட்டின் காவல் துறையின் செயல்பாடுகள் மேற்கண்ட வகையில் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு குறித்த பிரச்சனைகளால் அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே தமிழக அரசு மற்றும் காவல் துறை மீது பெரும் அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது. மேலும் மேற்கண்ட வகையில் பொதுமக்கள், ரியல் எஸ்டேட் முனைவோர்கள் மற்றும் இனம்,மொழி,கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து தரப்பினரும் கூலிப்படையினரால் மிரட்டப்படுவதும், கண்மூடித்தனமாக தாக்கப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் மிரட்டி பறிக்கப்படுவது போன்ற குற்றச்செயல்கள் தொடர்வது நடைபெற்று வருவது பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பிற்கு உத்தரவில்லாத சூழ்நிலை நிலவுவது கவலைக்குரியது.
மேலும் P.தண்டபாணி அவர்கள் தன்னை தாக்கிய கூலிப்படையினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதனால் வரை சம்மந்தப்பட்ட கூலிப்படை நபர்கள் மற்றும் கூலிப்படையினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாதது மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் பணி புரியும் காவல்துறையினர் கூலிப்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு பயந்து வாழும் சூழலில் உள்ள P.தண்டபாணி அவர்களை மிரட்டும் செயல்களின் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
ஆகவே உயர்திரு தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட சம்பவங்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மொழி, இனம், அரசியல் பேதம் இன்றி நடுநிலையோடு நியாயமான முறையில் செயல்பட்டு எமது கூட்டமைப்பின் உறுப்பினர் P.தண்டபாணி அவர்களை கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற துர்க்கை நம்மியன்தலை சேர்ந்த கமல், முத்துக்குமார், கூலிப்படையின் தலைவன் திமுக தேவதாஸ், ஜெயா (எ) ஜெயபிரகாஷ், ரஜினி மற்றும் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் ஆகியோர்கள் மீது கடுமையான சட்ட பிரிவின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் இதுபோல் நிகழ்வுகள் நடைபெற வண்ணம் உரிய வழிவகை செய்ய வேண்டும் எனவும், மேலும் இக்கொடூர கொலை வெறி தாக்குதலினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு மிரட்டல் விடப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது FAIRA கூட்டமைப்பின் உறுப்பினர் P.தண்டபாணி மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும், உடைமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி ஆ.ஹென்றி காவல்துறை தலைவருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

