திருவள்ளூர் மாவட்டத்தில் ”தமிழ் புதல்வன், புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.9.2022 அன்று சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆவடி இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 18 கல்லூரிகளைச் சேர்ந்த 754 மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000-ம் வழங்குவதற்கான வங்கி பற்று அட்டை, விழிப்புணர்வு கையேடு மற்றும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மலர் அடங்கிய தொகுப்புகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தில் மொத்தம் 11,882 கல்லூரி மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.”புதுமைப் பெண்” திட்டத்தில் பயனடைந்து வரும் ஐஸ்வர்யா கூறியதாவது :
ஆவடியில் வசித்து, முருகாப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இ.சி.இ படித்து வருகிறேன்.எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம் ஆகும் கல்விக் என தனியாக எனது தந்தையால் செலவினம் மேற்கொள்ள இயலாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய திட்டமான “புதுமைப் பெண்” திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாதந்தோறும் ரூ.1000 எனது வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. இது மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது. என்னை போன்ற பெண்களின் உயர்கல்வி கனவினை நினைவாக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் 09.08.2024 அன்று 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து பட்டறைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ” தமிழ் புதல்வன் ” திட்டத்தில் மொத்தம் 10,583 கல்லூரி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.” தமிழ் புதல்வன் ” திட்டத்தில் பயனடைந்து வரும் மனோ சஞ்சய் பாண்டேஸ்வரத்தில் வசித்து, டி.ஆர்.பி.சி.சி.சி இந்து கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலங்கலை படித்து வருகிறேன் கல்வி கட்டணம் செலுத்த சீரமப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் “தமிழ் புதல்வன்” திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாதந்தோறும் ரூ.1000 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.