பெரியகுப்பத்தில் பெண் குழந்தைகளை காப்போம்

Loading

பெரியகுப்பத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் டிச 24 : திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம் பெரியகுப்பம் ஜெ.என்.சாலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழாவை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பான AI விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கடிதத்தை கையெழுத்திட்டு வழங்கினார்.
மேலும், கடந்த 2 நாட்களுக்குள் பிறந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்களை பாராட்டி, நினைவு பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு கடிதங்களை வழங்கினார். பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும்  கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண் குழந்தைகள், பெண் சிசுக்கள் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனைகளும் வரக்கூடாது. எந்த சிரமமும் இன்றி பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக  ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதாரத்துறை என அனைத்து துறைகளும் ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. குழுக்களின் மூலம் ஏதாவது குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் ஆகியவை தொடர்பாக  விழிப்புணர்வுடன் கவனித்து வருகிறோம்.
கருவுற்ற பெண்களை பராமரிப்பதற்காக மருத்துவ துறை, சமூக நலத்துறை சார்பாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மூவலூர் இராம அமிர்த அம்மையார் திட்டம் எம் ஆர் எம் சி மூலமாக அவர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 2 மற்றும் 3 நாட்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை போற்றுவோம் விதமாக மரக்கன்றுகள், பெற்றோர்களுக்கு நினைவு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்க உள்ளோம். அந்த குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், என்றும் குழந்தை திருமணமும் மற்றும் இயற்கைக்கு மாறான எந்த ஒரு செயலும் செய்யாமல் நன்றாக படிக்க வைத்து இந்த சமூகத்தில் சிறப்பான இடத்தினை பெற வேண்டும் என்று பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்க உள்ளோம்.
மாவட்டத்தில் இருக்கும் 50000 சிறுமியர்களுக்கும் அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் கடிதம் கொடுத்திருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கான முக்கியத்துவம் மற்றும்  உரிமைகள் என்னென்ன என்பது பற்றியும்  பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டியவை என்னென்ன என்பது பற்றி நேர்முக கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த வாரத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு சென்று சேரும். பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு கையொப்பம் பெறப்படவுள்ளது. இந்த கடிதம் எதற்கென்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் சில பகுதிகளில் ஆண் பெண் பிறப்பு விகிதம் சராசரி குறைவாக உள்ளது. அந்த விகித்தை அதிகரிப்பதற்காக எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் 950 வீதம் தான் பெண் குழந்தை பிறப்பு விகிதம் உள்ளது அதை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதை ஓர் முன்னெடுப்பாக செய்துள்ளோம் என  மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் மாவட்ட சமூக நலன் அலுவலர் சோ.வனிதா, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares