குமரகுரு கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு

Loading

கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றதுடன், தற்போதய தொழில் முனைவோர்களுக்கு சாதனை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.. 
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்லூரியில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. மேலும், ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடுவதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையமும், கல்லூரி வளாகத்தில் தொடங்க பட்டது.
உலகம் முழுவதிலுமிருந்து குமரகுரு கல்வி நிறுவனங்களின் 700 முன்னாள் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எழிலரசி, முன்னாள் மாணவர்களை வரவேற்று பேசினார். இந்நிகழ்வில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில் குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையம்  திறக்கப்பட்டது. இந்த மையம், இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் ரூ.2.5 கோடி சிறப்பு மானியத்துடன் நிறுவப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு ஜவுளிகள், பூசப்பட்ட மற்றும் அடுக்கு ஜவுளிகள், மருத்துவ மற்றும் தடுப்பு ஜவுளிகள், ஸ்மார்ட் மற்றும் வடிவமைக்கப்பட்ட நெசவு கட்டமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஜவுளிப் பயன்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் சோதனை மையமாக இம்மையம் அமைந்துள்ளது.. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்.. குமரகுரு கல்வி நிறுவனங்களின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 5 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
த்ரிவேணி எர்த்மூவர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன்,
திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறைத் தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரல் பூங்குழலி,  குவாட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாகராஜ், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் தொலைநிலை கையாளுதல் மற்றும் கதிர்வீச்சு சோதனைகள் பிரிவின் தலைவர் ஜோசப் வின்ஸ்டன், க்ரீன்டெக் நிறுவனத்தின் டேட்டா ப்ராடக்ட் சூட் பிரிவின் நிர்வாக இயக்குநர்  கார்த்திகேயன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதுடன், கூடுதலாக முன்னாள் மாணவர்கள் 48 பேருக்கு, ஜவுளித் துறை தலைமைத்துவம், தொழில்முனைவு, புதுமை மற்றும் முயற்சி ஆகியவற்றிற்காக கௌரவிக்கப்பட்டது.முன்னாள் மாணவர் உறவுகள் துறை இணைத் தலைவர் பேராசிரியர் தேவகி வழிகாட்டுதலின் கீழ், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares