தேசிய பட்டியலின இயக்குநர் எஸ்.ரவிவர்மன்ஆய்வு

Loading

கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் சுவர் இடிந்து விழுந்த இடத்தை தமிழ்நாடு புதுச்சேரி மண்டல தேசிய பட்டியலின இயக்குநர் எஸ்.ரவிவர்மன் ஆய்வு :
திருவள்ளூர் டிச 22 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 16.12.2025 அன்று அப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் எஸ்.மோஹித் பள்ளியில் மதிய உணவு இடைவெளியின் போது சுமார் 12.45 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் அருகில் உட்கார்ந்து உணவருந்தி கொண்டிருக்கும் போது பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மண்டல தேசிய பட்டியலின இயக்குநர் எஸ்.ரவிவர்மன் சம்பவம் நடைபெற்ற கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் நா.மா.கனிமொழி, திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் கந்தன் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் சென்னை மண்டல தேசிய பட்டியலின ஆய்வு அலுவலர் லிஸ்டர் மற்றும் ஆய்வு அலுவலர் சுரேஷ். திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.
0Shares