நீலகிரி கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சலுகை
![]()
நீலகிரி மாவட்டம்
குன்னூர் அருகே கேத்தி சிஎஸ்ஜ பொறியியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் சேரும் நீலகிரி மாவட்ட மாணவர்களுக்கு சிறப்பு சலுகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ கோவை திருமண்டல ஆயர் திமோத்தியு ரவிந்தர் கலந்துகொண்டு பேசுகையில்:- சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில்,மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில்தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் சார்பிலும்,புதிய தொழில்நுட்ப ஆணையம் இணைந்து இந்தக் கல்லூரியில் புதிய விஞ்ஞானிகளை உருவாக்கவும், அவர்களின் திறமைக்கு ஏற்றார் போல் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் என்.எஸ்.எஸ். அமைப்பு 2024- 25-ம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது.மேலும் கிராமத்து தொழில் -பள்ளிக்கூடம் இணையும் திட்டத்தின் கீழ் மாஞ்சி அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதுபோல் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க இந்த கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் தற்போது புதியதாக ட்ரோன் மற்றும் ரோவாலாகிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்காக சிறப்பு பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வரும் கல்வி ஆண்டில் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கை வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்க உள்ளது, இதில் விண்ணப்பிக்கும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ- மாணவியருக்கு நிர்வாக கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.என கூறினார். அவருடன் பிஷப் அம்ம,கல்லூரி நிர்வாக இயக்குனர் அருமைராஜ், பொருளார் அமிர்தம்,முதல்வர் டாக்டர் மெர்சி சாந்தி,கல்லூரி தாளாளர் கிட்வின் டானியல்,உள்ளிட்ட கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புகள் குறித்த சிறப்பு நாடகங்களும் நடத்தப்பட்டது.

