திருவள்ளூர்தமிழ்நாடு-தேசிய அளவில் சிறந்த ஊராட்சி

Loading

 

திருவள்ளூர்

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் காமராஜர் நகரில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முகாம் இல்லத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நேரில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ்நாடு-தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி – 3 வது இடத்திற்கு பெற்ற விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.எஸ்.யுவராஜ், உதவி செயற்பொறியாளர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares