K.N.நேரு&சா.மு.நாசர் நீர்வெளியேற்றும்பணிகள்ஆய்வு
![]()
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சா.மு.நாசர் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு :
திருவள்ளூர் டிச 04 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்போது அருகிலுள்ள ஏரியிலிருந்து நேரடியாக கால்வாய் கட்டினால் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காது என்ற அடிப்படையில் , 800 மீட்டர் தான் கால்வாய் கட்ட வேண்டியுள்ளது. கால்வாய் கட்ட ஆணையிட்டுள்ள அரசு செயலாளரும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணிகள் நடைபெறும் .
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி மாநிலத்தில் மழை நீர் தேங்கி நிற்காத வண்ணம் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்போது அருகிலுள்ள ஏரியிலிருந்து நேரடியாக கால்வாய் கட்டினால் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காது என்ற அடிப்படையில் , 800 மீட்டர் தான் கால்வாய் கட்ட வேண்டியுள்ளது. கால்வாய் கட்ட ஆணையிட்டுள்ள அரசு செயலாளரும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணிகள் நடைபெறும் .
மேலும், எந்த இடத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் அமைக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறதோ
அந்த இடத்தில் கால்வாய் கட்டப்படும். இனி எந்த காலத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு அமைக்கப்படும். ஏற்கனவே குடியிருப்பு பகுதிக்கு ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்,
ஆவடி மாநகராட்சியில் மிகச்சிறப்பாக அதிகாரிகளும், அமைச்சர்களும் சிறப்பான முறையி ல் செயல்படுகிறார்கள். அதே போன்று திருவள்ளூர் மாவட்டம் பொறுத்தவரையில் மொத்தம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மாவட்டங்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம் தண்ணீர் வழங்குகிறது. மழை அளவு சராசரி அளவே உள்ளது அதனால் அதிக அளவில் பாதிப்புகள் இல்லை ஆனால் திடீரென்று அதிகமாக மழை பெய்யும் போது ஒரு இரண்டு நாட்கள் நீண்ட நேரம் மழை பொழிந்தால் மழை நீர் தேங்கி நிற்கும். அதற்காக மோட்டார்கள் கொண்டு வந்து, சென்னையிலிருந்து மறுபடியும் அதிக அளவில் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே நாளில் எல்லா தண்ணீரும் வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் கூடுதல் நிதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளின் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேலும் ரு.30 கோடி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ஆவடி மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.45 கோடி நிதி வேண்டி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர் இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆவடி மாநகராட்சியில் மிகச்சிறப்பாக அதிகாரிகளும், அமைச்சர்களும் சிறப்பான முறையி
அதனை தொடர்ந்து, பூவிருந்தவல்லி வட்டம் சென்னீர்குப்பம் மாசிலாமணி நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழை நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாக துறை சார்பில் புதிதாக
கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இவ் ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

