தேனிமாவட்ட எய்ட்ஸ்தடுப்புவிழிப்புணர்வுஉறுதிமொழி

Loading

தேனி  மாவட்டம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை   மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

தேனி மாவட்டம், கைலாசப்பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில்    மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை (டிசம்பர் 1) முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள்  (01.12.2025)அன்று  ஏற்றுக்கொண்டனர்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த வருடம் ‘’இடையூறுகளை கடந்து, எய்ட்ஸ் தொடர்பான  எதிர்வினைகளை மாற்றுதல்’’ (Overcoming disruption, transforming the AIDS response) என்ற மையக்கருத்தினை மையமாக கொண்டு உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

எய்ட்ஸ் தொற்றினை  முழுவதும் ஒழிப்பதற்கான பல்வேறு முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  தேனி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையம் மூலம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது, மேலும்,   கையெழுத்து இயக்கம் மற்றும் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய  ஸ்டால்கள் அமைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் தடுப்பு பணியில் 16 நம்பிக்கை மையங்களும்,    35 துணை நம்பிக்கை மையங்களும், 2 ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிக்சை மையமும்,  8 துணை ஏ.ஆர்.டி மையங்களும், 1 நடமாடும் நம்பிக்கை மையமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும், எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்புக்கு முக்கிய காரணமான பால்வினை தொற்றினை தடுக்கும் 16 சுகவாழ்வு மையங்கள், இரத்த பரிமாற்றம் மூலம் பரவுதலை தடுப்பதற்காக 3 குருதி மையங்கள், நகர்புறத்தில் இலக்கு மக்களுக்கான திட்டமும், கிராமப்புறத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர் பணியாளர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க இலவச  சட்ட உதவி மையம் செயல்பட்டு  வருகிறது.

இவ்வாண்டு உலக இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் 150 பள்ளிகளில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.           பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மூலம் எதிர் வரும் காலங்களில்        எச்.ஐ.வி / எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை  உருவாக்கி ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிவகுக்க  வேண்டும்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஜீவன் ஜோதி நல மையத்தில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர   அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற சமபந்தி போஜன நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  கலந்து கொண்டு, உணவருந்தினார்  முன்னதாக எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மரு.ஏ.ஆர்.ராஜபிரகாஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் திட்ட மேலாளர் திரு.முகமது பாருக், ஜீவன்ஜோதி நல மையத்தின் அருட்சகோதரிகள் டெல்லா, அனஸ்தாசியா, தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares