மழைநீரால்பள்ளிசெல்லும்மாணவமாணவிகள்பாதிப்பு

Loading

கனகம்மாசத்திரம் அருகே தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி : பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் : 
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அருகே நெடும்பரம் ஊராட்சி அன்னை மாதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கனகம்மாசத்திரம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதே நேரத்தில்  கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் அன்னை மாதா நகர் பகுதியில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் லேசாக மழை பெய்தாலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.  பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் இருப்பதால் பள்ளி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி விழுந்து அடிபடும் சூழ்நிலையும் நிலவுகிறது.
அதனால் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மீண்டும் மழை பெய்ய இருப்பதால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares