மகளைபாலியல் செய்த தந்தைக்கு17ஆண்டுசிறை
![]()
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை : திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் நவ 29 : சென்னை புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே ஐசிஎப்-ல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.சுரேஷ் குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனைவியிடம் விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.மனைவி விவாகரத்து கொடுக்க சம்மதிக்காததால் ஏழாம் வகுப்பு படித்து வந்த தனது மகளிடம் தந்தை சுரேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மனைவி சந்தியா திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் சுரேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் விஜயலஷ்மி ஆஜராகி வாதாடினார். விசாரணையைத் தொடர்ந்து நேற்று நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
12 வயதுடைய தன்னுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை சுரேஷ்குமாருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கிடவும் பரிந்துரை செய்தார். தீர்ப்புக்குப்பின் சுரேஷ்குமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

