கோவையில்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Loading

கோவையில் தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா*
*பெரிய கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*
தமிழக துணை முதல்வரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்  வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது..
பெரியகடை வீதி பகுதியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் கிளாசிக் பூபதி தலைமை வகித்தார்..
மாநில பொது செயலாளர் ரியாசுதீன் முன்னிலை வகித்தார்..
விழாவில் பெரிய கடை வீதி,ஒப்பணக்கார வீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்..
விழாவில் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் கிளாசிக் பூபதி,கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையான தங்க நகை பூங்கா அமைக்கும் பணிகளை துவக்கி உள்ள தமிழக முதல்வருக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கோல்டு முஸ்தபா,யாசர்,லைவ் அசார்,அப்சல்,கோல்டு தன்சில் உட்பட மகளிர் அணி நிர்வாகிகள்  என பலர் கலந்து கொண்டனர்..
0Shares