வெவ்வேறு இடங்களில் கண்டெடுத்த 2 ஆண் குழந்தை
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட 2 ஆண் குழந்தைகளை தத்து கொடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவிப்பு :
திருவள்ளூர் நவ 27 : கடந்த 20.10.2025 அன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி, ரெட்டித்தோப்பு, நாராணமூர்த்தி ஆரணி, ரெட்டி தோப்பு, நாராணமூர்த்தி Rice Mill பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பதாக பொதுமக்கள் வாயிலாக C3 ஆரணி காவல் நிலையத்திற்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டு, அன்றே மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும், தொடர் சிகிச்சைக்கு பின் 05.11.2025 அன்று குழந்தை Discharge செய்யப்பட்டு, இக்குழந்தைக்கு கிரஷ் என்று பெயர் சூட்டப்பட்டு குழந்தை நலக்குழு தலைவர் சு.தென்பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சு.சுதா ஆகியோர் முன்னிலையில், அகேப் லைப் லைன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைக்கு உரியவர்கள் யாரேனும் இருப்பின் தங்கள் ஆட்சேபனையை இவ்வறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.118, D’ பிளாக், முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர் – 602 001 என்ற முகவரியில் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத பட்சத்தில் இக்குழந்தையை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.அதே போல் கடந்த 23.10.2025 அன்று திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்த தாய் எந்த தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றதாக மருத்துவமனையிலிருந்து தகவல் பெறப்பட்டதின் பேரில், சைல்டு ஹெல்ப் லைன் பணியாளர் நேரில் சென்று விசாரித்ததில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராணி என்பவருக்கு திருமணமான மூன்று மாதத்தில் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும், அவர் சென்னைக்கு வந்தபோது பிரசவலி வந்து கடந்த 23.10.2025 அன்று திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்ததும், 03.11.2025 அன்று எந்த தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும், குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, 05.11.2025 அன்று குழந்தைக்கு இளமாறன் என்று பெயர் சூட்டப்பட்டு குழந்தை நலக்குழு தலைவர் சு.தென்பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சு.சுதா ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் Association For Rural Mass India (ARM) சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைக்குரியவர்கள் யாரேனும் இருப்பின் தங்கள் ஆட்சேபனையை இவ்வறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.118, D;’ பிளாக், முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர் – 602 001 என்ற முகவரியில் தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத பட்சத்தில் இக்குழந்தையை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

