World Ability Sports Game’ – 2025.
![]()
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ‘World Ability Sports Game’ – 2025.
சேலம் நவம்பர் 26
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச World Ability Sports Game 2025 நவம்பர் 17 முதல் 24 வரை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரா தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 தங்கப் பதக்கம், 16 வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 30 பதக்கங்கள் வென்றுள்ளனர். பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளை பாரா மாவட்ட கழக சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் வெங்கட்ராஜ், ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றினர். உடன் பயிற்சியாளர் உலகநாதன், தமிழக செயலாளர் சித்தேஸ்வரன், தலைவர் பரணிதரன் மற்றும் மாவட்ட பாரா விளையாட்டுச் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

