“பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகம் வெளியீட்டு விழா
![]()
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
இதனை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை பாராட்டும் விதமாகவும் ‘ஸ்டுடியோ ஏ’ நிறுவனத்தின் நிறுவனர் அமர் ரமேஷ் எழுதிய “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பவானி பகுதியை சேர்ந்த பல்வேறு நெசவாளர்கள் பங்கேற்றனர். ஜவுளி துறை திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்வப்னா மிஸ்ரா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று, கே.ஆர்.நாகராஜனிடம் இருந்து முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய ‘ஸ்டுடியோ ஏ’ நிறுவனத்தின் நிறுவனர் அமர் ரமேஷ், ஜமுக்காளம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என தானும் யோசித்து கொண்டிருந்தாதபோது, அதே நேரத்தில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களும் அதுபற்றி தன்னிடம் பேசியது, ஜமுக்காளம் பற்றிய ஒரு ஆவண படத்தை எடுக்கவேண்டும் என்ற முடிவை முதலில் எடுக்க உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டார். இதற்காக பல நாட்கள் பவானியில் தங்கி, ஜமுக்காளம் பற்றி தொழில்நுட்ப அளவிலும், கலை அளவிலும் பல்வேறு கோணங்களிலும் அதை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். அதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ஜமுக்காளம் மீதான சாதகமான விவாதங்களை உருவாக்கியது என பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

