புதுச்சேரி தவளக்குப்பம் புதிய கழிவு நீர் வாய்க்கால்
![]()
புதுச்சேரி நவ-24
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் புதிய கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி சபாநாயகர் தொடங்கி வைத்தார்
மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளகுப்பம் சீனிவாசா நகரில் ரூபாய் 32 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை
புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் திரு செல்வம். ஆர் அவர்கள் இன்று 24.11.2025 பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தவளக்குப்பம் சீனிவாசன் நகர் பகுதியில் கழிவுநீர் செல்ல சரியான வடிகால் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம்.ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 32 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் இப்பணிகளை தொடங்க அரசாணை பெற்று தந்தார்.
அதன் அடிப்படையில் பணிகளை தொடங்கும் முகமாக இன்று 24.11.2025 சீனிவாசன் நகரில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு விநாயகமூர்த்தி உதவிப் பொறியாளர் திரு நாகராஜன் இளநிலை பொறியாளர் திருமதி சரஸ்வதி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட தலைவர் சுகுமாரன் துணை தலைவர் மணிகண்டன் கோபு ராஜா யுவராஜ் மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

