14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி

Loading

சேலத்தில் 14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா
சேலம் நவ. 22
சேலம் சிறுமலர் அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளியில் 14வது  ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தா தேவி ஆகியோர் கலந்துகொண்டு ஹாக்கி போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்  ஜோதி ஃபெர்ணான்டோ, உதவி தலைமை ஆசிரியர் டேவிட் மற்றும் செயின்ட் மேரீஸ் பள்ளி தலைமையாசிரியை இருதய மேரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
0Shares