தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் போராட்டம்

Loading

திருவள்ளூரில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றினைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் :

திருவள்ளூர் நவ 21 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றினைப்பினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பா.வித்யா முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ச.சரத்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எஸ்வந்தர்தாஸ் கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காந்திமதிநாதன், வட்டாரத் தலைவர் யோகராசு, மாவட்ட செயலாளரும், மாநில துணைத்தலைவருமான மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அப்போது, ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவையர்களை முற்றிலும் கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த நியமனம் செய்தல், புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்கிய வேண்டும். நில அளவை உள்பிரிவு செய்யும் அதிகாரத்தினை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கியதை திரும்ப பெற்று, நில அளவை களப்பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதியாக மாவட்ட பொருளாளர் சு.நாராயணன் நன்றி கூறினார்.
0Shares