72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

Loading

திருவள்ளூர் நவ 19 :
திருவள்ளூரில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா : 2124 பயனாளிகளுக்கு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2124 பயனாளிகளுக்கு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள். 1 நகர கூட்டுறவு வங்கி. 10 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 53 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள். 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 227 கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான கடன்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்கள். விதை, உரங்கள். இடுபொருட்கள் விநியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும். கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் தங்களது சேவையினை செய்து வருகின்றன. திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள 51543 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், நியாய விலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரர்கள் பயனுறும் வகையில் 27 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.
முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டு, 2 பயளானிகளுக்கு தலா ரூ.7 இலட்சம் மதிப்பில் பண்ணை சார்ந்த மத்திய கால கடனாக 2 டிராக்டர்களை ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் அமைச்சர்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கதை சொல்லும் போட்டி, ஒவியப் போட்டி ஆகிய  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயங்களையும், கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 2 சிறந்த கூட்டுறவாளர்களை பாராட்டி  நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பாக  செயல்பட்ட கூட்டுறவு நிறுவனம் மற்றும் சங்களுக்கு கேடயங்களையும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயலாற்றிய விற்பளையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு மகளிர் சுய உதவிக்குழு, பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், சிறுவணிக கடன், மாற்றுத்திறனாளி கடன் என 2124 நபர்களுக்கு மொத்தம் ரூ.23,80,67,013 மதிப்பிலான கடன் உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் அமைச்சர் வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி இராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி) கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, கூடுதல் பதிவாளரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநருமான ஆ.க.சிவமலர், திருவள்ளுர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், திருத்தணி சரகம் துணை பதிவாளர் சி.அமுதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares