மக்கள் குறை தீர்க்கும் நாள்444 கோரிக்கை மனுக்கள்
![]()
திருவள்ளூர் நவ 19 :
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 444 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 444 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 136 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 54 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 70 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி97 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 87 மனுக்களும் என மொத்தம் 444 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
மேலும், தூய்மை பணியாளர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், துணை ஆட்சியர் பயிற்சி) செ.சண்முக பிரீத்தா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

