ஆர்எஸ்புரம் தி ஐ ஃபவுண்டேஷன்விழிப்புணர்வுபேரணி

Loading

கோவை
கோவை ஆர் எஸ் புரம், தி ஐ ஃபவுண்டேஷன் சார்பில் சர்க்கரை நோயினால் கண் ஆரோக்கியத்திற்குள்ள பாதிப்பை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக,  விழிப்புணர்வு வாக்கத்தா பேரணி நடைபெற்றது.. 
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ‘தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை அமைந்துள்ளது இம்மருத்துவமனைசார்பாக, உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது.
இந்த பேரணியானது  நீரிழிவு நோயினால், அதிகரிக்கும் கவலைக்குரிய நிலை மற்றும், அதன் மூலமாக, கண் ஆரோக்கியத்திற்கான தீவிரமான தாக்கத்ம் குறித்தும், குறிப்பாக இவற்றை தடுப்பதற்கான  விழிப்புணர்வை  வெளிப்படுத்துவதை நோக்கமாகக் அமைந்தது
தி ஐ ஃபவுண்டேஷன், வளாகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணியில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அவருடன் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின்  விற்றீயோ ரெட்டினா துறையை சேர்ந்த மூத்த நிபுணர் டாக்டர். ஜதிந்தர் சிங், டாக்டர். சிருஷ்டி ராமமூர்த்தி, மூத்த நிபுணர் டாக்டர் தென்னரசன், மருத்துவ குழுமத்தின் திட்ட பிரிவு துணை தலைவர்  கிருஷ்ண குமார்; மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி அர்ஜுன் மற்றும் மூத்த நிபுணர் டாக்டர். ஆஷ்ரயா நாயக்கா ஆகியோர் இணைந்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதன் மூலமாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண்களை  பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், வாழ்க்கை முறை கட்டுப்பாடு, மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிதல் ஆகியவற்றை வலியுறுத்தும் பதாதாகளை ஏந்தியவாறு, மாணவர்கள் நடைபயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares