இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார்வல்லபாய் பட்டேல்
![]()
இந்தியா
சுதந்திரத்திற்குப் பிறகு துண்டு துண்டாக இருந்த இந்தியாவை ஒன்றிணைத்து வலுவான பிரிக்கப்படாத தேசமாக வடிவமைத்த மனிதரைப் போற்றுவதில் நம் அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணம்!
இந்தியாவின் “இரும்பு மனிதர்” என்று போற்றப்படுபவர் “சர்தார் வல்லபாய் பட்டேல்” அவர்களை நாம் அனைவரும் அறிவோம். இந்தியா ஒன்று, இந்தியா ஒன்றுபட்டது, இந்தியா என்றென்றும் ஒற்றுமையாக இருக்கும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை இக்கால இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டவே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
நமது பாரத பிரதமரின் 2047 ஆண்டு விக்சித் பாரதத்தின் இலக்கை அடைய, நம் இந்திய இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த தன் நிறைவான நாட்டை உருவாக்க பாடுபட வேண்டும்.
இந்த கருத்துக்களை மனதில் கொண்டு அக்டோபர் ஆறாம் தேதி முதல் மை பாரத் என்னும் இளையதளத்தில் கட்டுரைப் போட்டிகள் ஊடக ரீல் போட்டிகள் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இளைஞர்கள் ஒவ்வொருவரும் இப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு சர்தார் பட்டேலின் கருத்துக்கள் மனதில் பரப்புவதற்கான எளிய வழியாகும்.
கூடுதலாக, அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை நாடு முழுவதும் பாதை யாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பாதை யாத்திரையில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் இந்தியாவின் சுதந்திரம் தன்னம்பிக்கை மூலம் அடையப்பட்டது என்பதையும் சர்தார் பட்டேலின் தொலைநோக்கு பார்வையை பின்பற்றுவதன் மூலம் நமது பாரத பிரதமரால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கான குரல் மற்றும் ஆத்ம நிருபர் பாரத் ஆகியவற்றின் உணர்வை நாம் முன்னெடுத்து செல்கிறோம். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

