பொதுமக்களிடமிருந்து160 மனுக்களைபெற்றஆட்சியர்

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் நாள் மாவட்ட குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு  அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 160 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக, அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு போன்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அதன் மீது தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணன் (கணக்குகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares