சீனியர்ஆண்கள்,பெண்களுக்கானபளுதூக்கும் போட்டி
![]()
சேலம் மாவட்ட பளுதூக்கும் போட்டி 2025 – 26 இயையேர் ஜூனியர், சீனியர் ஆண்கள், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, ஸ்ரீ மதுர காளியம்மன் பொது மகாஜனா திருமண மண்டபத்தில், சேலம் மாவட்ட பளுதூக்கும் சங்கமும், தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கமும் இணைந்து பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சண்முகம், பொதுச்செயலாளர் சேலம் மாவட்ட பளு தூக்கும் சங்கம் வரவேற்புரையாற்றினார்.
மார்க்கோனி, தலைவர் சேலம் மாவட்ட பளுத்தூக்கும் சங்கம், தலைமை தாங்கினார், கார்த்திகேயன், முருகன், அசோகன், இளங்கோவன், சிவராஜ், பாபு, சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசைத்தம்பி, சசிகுமார், முருகன், மாணிக்கம், சந்திரசேகரன், பிரகாஷ், பாபு, பார்த்திபன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கல்பனா, சிவக்குமார், பாலகிருஷ்ணன், இளங்கோவன், மதிவாணன், சாமிநாதன், சந்தானராஜா, ரஞ்சித் குமார், பழனிவேலு, நல்லகுமார், அர்ச்சனா, பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாலை நடைபெற்றது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து உடற்பயிற்சி நிலையங்கள் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று
வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளை நவம்பர் மாதம் 28, 29, 30ஆம் தேதியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு தகுதியுள்ள வீரர் மட்டும் வீராங்கனைகளை மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாலை நடைபெற்றது.

