கையெழுத்துஇயக்கம் ரஞ்ஜீத் சிங்தொடங்கி வைத்தார்
![]()
தேனி மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் (08.11.2025) அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer – BLO) இல்லம் தோறும் சென்று, கணக்கெடுப்புப் படிவம் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளின் முக்கியத்துவம் தொடர்பாக தங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மின்னணு திரையில் (LED Screen) ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படத்தை கல்லூரி மாணவர்களுடன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ரமாபிரபா மற்றும் கல்லூரி தாளாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

