சிறப்பு தீவிர திருத்தம் -2026 செய்தியாளர்கள் சந்திப்பு
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு :
திருவள்ளூர் நவ 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது :
வாக்காளர்கள் அடிப்படை 18 வயது பூர்த்தி அடைந்த தேதி வாக்காளர் தீவிர திருத்ததிற்கு 01.01.2026. திருவள்ளூர் மாவட்டத்தில் 27.10.2025 –ன் படி மொத்தம் 35,82,000 வாக்காளர்கள் 10 தொகுதிகளையும் சேர்த்து, அதில் அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில 4,95,000 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,71,000 மொத்தம் உள்ள 3699 வாக்குச்சாவடிகள் மாவட்டத்தில் இருக்கின்றது. இப்பணிகளுக்கு 3699 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும், 391 மேற்பார்வையாளர்களையும், 33 உதவி வாக்குப்பதிவு அலுவலர்களையும், 10 வாக்கு பதிவு அலுவலர்களையும், இப்பணியில் முழுமையாக ஈடுபட உள்ளனர். நாளை நவம்பர் நான்காம் தேதியிலிருந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.
அச்சமயம் வாக்காளர்கள் எந்த ஆவணங்களையும் கொடுக்கத் தேவையில்லை. இந்த சிறப்பு தீவிர திருத்தம் 4.11.2025 முதல் 4.12.2025 வரை இந்த ஒரு மாத காலம் நடக்க உள்ளது. ஒவ்வொரு வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் குறைந்தபட்சம் 3 தடவைகள் சொல்ல வேண்டியிருக்கும். ஒருவேளை வெளியூர்களுக்கு சென்று இருக்கும் பட்சத்தில் மறுமுறையும் அந்த வீடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். 2004-க்கு முன்னர் வாக்கு சாவடி அந்த பட்டியலில் நமது பெயரோ அல்லது உறவினர்கள் பெயரோ இருந்தால் போதுமானது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அழைப்பானை வழங்கப்பட்டு விசாரனை செய்யப்படும்.
இதற்கு பின்னர் 9.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வரைவு வாக்காளர் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டு உள்ளவர்கள் ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதன்மை தேர்தல் அலுவலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டதை உரிமை கோரல் மற்றும் மறுப்புரைகளை. ஒரு மாத காலத்திற்கு, 9.12.2025 முதல் 08.01.2026 வரைக்கும் உரிமை கோரல் மற்றும் மறுப்புரைகளை மனுக்கள் வாங்கப்படும். அதன் பின்னர் வாக்கு பதிவு அலுவலர்களாக இருக்க்கூடிய துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி, ஆவடி மாநகராட்சி துணை ஆணையர்கள், சென்னை மாநகராட்சி சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் அவர்கள் அழைப்பானை வழங்கி விசாரனை செய்ய உள்ளனர்.இதில் வாக்காளர் பெயர் நீக்கல் என்பது 9.12.2025 லிருந்து 31.1.2026 வரைக்கும் இந்த விசாரனை மேற்கொள்ளப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 7.2.2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகாளவது எந்த ஒரு வாக்காளரும் விடுபட்ட கூடாது என்ற நோக்கத்தோடு அனைத்து அலுவலர்களும் இந்த பணியை வந்து சிறப்பாக செய்ய உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் கூறினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம் வெங்கட்ராமன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

