யுனைடெட் கல்வி நிறுவனங்கள் எக்ஸ்ப்ளோர் 2025

Loading

கோவை
யுனைடெட் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்ப்ளோர் 2025
மாபெரும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்ப்ளோர் 2025 என்ற பெயரில் ஸ்கை கேன்வாஸ், ரெஸ்க்யூ கேர், பார்மாஸ்பியர் மற்றும் காஸ்மிக் ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாபெரும் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடத்தினர். மேலும் கல்லூரி மைதானத்தில் டிரோன் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இக்கண்காட்சியை கோவையை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பார்மஸி கல்லூரி, நர்சிங் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, மருந்தியல் கல்லூரி மற்றும் சி பி எஸ் சி பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாணவ மாணவிகள் பல்வேறு துறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் கண்காட்சிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு 2 நாட்கள் யுனைடெட் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்ப்ளோர் 2025 என்ற பெயரில் ஸ்கை கேன்வாஸ், ரெஸ்க்யூ கேர், பார்மாஸ்பியர் மற்றும் காஸ்மிக் ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாபெரும் கண்காட்சியினை நடத்தினர்.
இக்கண்காட்சியின் துவக்க விழாவில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் எஸ் சண்முகம், நிர்வாக இயக்குநர் டாக்டர் பி சிவகுமார், கல்வி இயக்குனர் டாக்டர் எஸ் மைதிலி மற்றும் யுனைடெட் கல்விக் குழுமத்திற்குட்பட்ட கல்லூரியின் முதல்வர்கள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியிலே ஸ்கை கேன்வாஸ், ரெஸ்க்யூ கேர், பார்மாஸ்பியர் மற்றும் காஸ்மிக் ட்ரீம்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
யுனைடெட் கல்வி நிறுவனங்களான பொறியியல், ஃபார்மசி, மெடிக்கல் சயின்ஸ் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளை சார்ந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியாட்சியில் இடம் பெற்றன. மேலும் மருத்துவ மனை ஐ சி யு மாதிரிகள், மருந்தக மாதிரிகள், அறுவை சிகிச்சை மாதிரிகள் மற்றும் கருவிகளை காட்சிப் படுத்தியிருந்தனர்.
இக்கண்காட்சியில் விண்ணில் இருந்த விழுந்த எரிகற்கள், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு வடிவிலான டிரோன்கள், வானூர்தயின் மாதிரிகள் போன்றவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அதனை பார்வையிட்ட மாணவ மாணவிகளுக்கு அதன் செயல்பாடுகள் குறித்து கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு பூகோள வடிவ ஏர் பலூனுக்குள் புரொஜெக்டர் மூலம் 360 டிகிரியில் விண்வெளி குறித்த வீடியோ ஒளிபரப்பட்டது அதனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளிகளிலிருந்து இரண்டா யிரதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியினை கண்டு பயனடைந்தனர்.
தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் கிரீன் டெக் ஏவியேசன் நிறுவனம் சார்பில் ஏர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான டிரோன்கள் மற்றும் சிறிய ரக விமானங்களை எவ்வாறு பறக்கவிடுவது தரையிறக்குவது என்பது குறித்தும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், குட்டி விமான மாதிரிகளை விண்ணில் ஏவுவது குறித்த பயிற்சிகள் வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர்.
குறிப்பாக டிரோன் மூலம் பூக்கள் கொட்டியது, விவசாயத்திற்கு பயன்படும் டிரோன் மூலம் பன்னீர் தெளித்தது மற்றும் அதிவேகமாக பறக்கும் டிரோன்கள் மாணவர்களை கவர்ந்தன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியிலே பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ மாணவியர் கள் கலந்து கொண்டனர்.
0Shares