கோவை முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
![]()
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில் கோவை சிவாஜி காலனியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்திவிழா, மருதுபாண்டியர் 224வது குருபூஜை விழா நிகழ்ச்சி கொண்டாட பட்டது.
கோவை சிவாஜி காலனியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் மாமன்னர் மருதுபாண்டியரின் 224 வது குருபூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமை தாங்கினார். தொடர்ந்து மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இருவரின் நினைவுகளும் எடுத்துக் கூறப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்க தலைவர் லயன் டாக்டர் நடராஜன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தடாகம் மயில்சாமி, மருத்துவர் கோ தமிழழகன், திமுக 15 வது வார்டு செயலாளர் வைத்தியர் பாலகிருஷ்ணன், சாரல் அமுதம் பொது நல அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் சித்த வைத்தியருமான ராஜுசாமி, ஆனைகட்டி சேகர், பாண்டியன், மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் செல்வராஜ், லட்சுமி, திவ்யா, ஜெபா, கோமதி, விஜய், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

