கூவம்ஆற்றில் வெள்ளப்பெருக்குதரைப்பாலம்துண்டிப்பு

Loading

கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் 15 கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலை :

திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம்,சத்தரை, சத்தரை கண்டிகை, கொண்டஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும்,  ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள கேசாவரம் அணைக்கட்டிலிருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீரால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சத்தரை, கொண்டஞ்சேரி  இடையே கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனால்  கொண்டஞ்சேரி, மப்பேடு, கொட்டையூர், கிழச்சேரி,  உளுந்தை, கூவம், பன்னுர் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு செல்வதற்கு பேரம்பாக்கம் வழியாக 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன் எச்சரிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும்  தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து அரசு தர வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares