ஆர்ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் கண்காட்சி

Loading

கோவை
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர் ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் 19ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி கிரிசாலிஸ் எனும் பெயரில், நடைபெற்ற இக்கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் காட்சி படுத்த பட்டது..
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள, ஆர் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19 வது, கலை அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிரிசாலிஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆர் ஜே பள்ளியின், தாளாளரும், முனைவருமான  ஆர். விஜயலக்ஷ்மி மற்றும் பள்ளியின் செயலாளர்  ஆர். அனில்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். ஒரு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில், யூகேஜி வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து, மாணவ மாணவியர்கள் தங்களுடைய தனித்திறன், மற்றும் குழுத்திறன்களை வெளிப்படுத்தி, தங்களது படைப்புகளை காட்சிபடுத்தி அதற்கு செயல் விளக்கமும் அளித்தனர். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் என பாட வாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், ஆதி மனிதனின் வாழ்க்கை வரலாறு, மூவேந்தர்களின் ஆட்சி முறை, ஹெலிகாப்டர் மாதிரி காட்சி, அறிவியல் மற்றும் கணினியின் புதிய படைப்புகளான இணைய வழி அடிப்படையிலான எரிவாயு கசிவு கண்டறியும் கருவி, தீ அணைக்கும் ரோபோ, கைகுறி மொழி கையுறைகள், குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோ, ரேடார் முறை கணினிகள், நிலநடுக்கம் கண்டறியும் கருவி, மனிதர் இல்லா வானூர்தி  என ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை மாணவ மாணவியர்கள் காட்சி படுத்தினர். இக்கண்காட்சியை மாணவர்களின்  பெற்றோர்கள், ஆர்வமுடன் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் நிர்மலா மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாதிரி வடிவங்களையும் , செயல்படும் மாதிரிகளையும் பார்வையிட்டு மாணவர்களின் செயல் திறனையும் அறிவாற்றலையும் பாராட்டியதுடன், சிறப்பான கண்டுபிடிப்புகளுக்கு பரிசு தொகையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares