பூண்டி நீர்தேக்கத்தில் மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!
![]()
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு பேசினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 15 ஆம் தேதியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. 15 ஆம் தேதி 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மழையின் அளவு, அணையின் கொள்ளளவு, நீர்வரத்து மொத்த கொள்ளளவு 35 அடி ஏற்கனவே 33.7 அடி நிறைந்து இருக்கு. 80% நிறைந்துள்ளதால் வட கிழக்கு பருவ மழை ஆரம்பித்த பின் அதிக அளவு நீர் வரத்து இருக்கும் என்பதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பருவ மழை முன்னிட்டு தயார் நிலையில் வைத்திருக்கலாம் என 15ஆம் தேதி முதல் நீர்த்தேக்கத்தை திறந்து படிப்படியாக இன்றைக்கு வரைக்கும் 5300 கன அடி மொத்தமாக வெளியேற்றப்படுகிறது. தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சோழபுரம் ஏரி சென்று பின் மணலி, எண்ணூர் வழியாக கொசஸ்தலையாறு இரு பக்கமும் வழித்தடத்தில் சென்று கொண்டுயிருக்கிறது.
வடகிழக்கு பருவக்காற்று மழை காரணமாக 4400 தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது. 500 ஆப்டமித்ராக்கள் ஒன்றிய அரசு மூலம் ஆப்டமித்ராக்கள் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அந்தந்த ஊர்களில் வைத்திருக்கிறோம். மாவட்டத்தில் அதிகமாக பாதிப்படையக்கூடிய 47 பகுதிகளில் தனித்தனியாக தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தனித்தனியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய 140 பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். 7 நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் மீஞ்சூர், பொன்னேரி, பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோக 669 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளோம்.வெள்ள பாதிப்பு இருந்தால் மக்களை தங்க வைத்து அவர்களுக்கான உணவு, மருத்துவம் போன்ற வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 42 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கு 79 அவசரக்கால ஊர்தி தயார் நிலையில் இருக்கு அந்த பணிகளையும் முடுக்கிவிட்டுருக்கோம். மாநில கட்டுப்பாட்டு எண் 1077, மாவட்ட கட்டுப்பாட்டு அறை முடிக்கிவிடப்பட்டு 24 மணி நேரமும் நம்முடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு மழை தொடர்பான புகார்கள், வேறு ஏதாவது புகார்கள் இருந்த அந்த புகாரில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
பூண்டி நீர்தேக்கத்தில் கூட மக்கள் வந்து சிறு சிறு குழந்தைகளுக்கு கூட்டிட்டு வந்து செல்பி எடுப்பது, எட்டி பார்ப்பது என பொதுமக்கள் யாரும் இம்மாதிரி தேவையற்ற செயல்களில் தேவையில்லாத விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.இதில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் திலீப்குமார், உதவி பொறியாளர் அகிலன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

