பசுமை ஆலய திட்டம்..தன்னார்வலர்களுக்கு பயிற்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அறிவிப்பு!

Loading

ஈரோடு மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்ஊரகப் பகுதிகளில், திரவ மற்றும் திடக்கழிவுகளைதரம் பிரித்து அதனை பயனுள்ள வகையில் மாற்றுவது குறித்து செயல் விளக்கபயிற்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊரகப்
பகுதிகளில், திரவ மற்றும் திடக்கழிவு குப்பைகளை தரம் பிரித்து அதனை பயனுள்ள
வகையில் மாற்றுவது குறித்து செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம் ஏரி, குளம், குட்டைகள் போன்று நீர் நிலைகள் சார்ந்த
பகுதிகள் அதிகம் உள்ள மாவட்டம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்று
ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் திரவ மற்றும்
திடக்கழிவு குப்பைகளை கொண்டு அதனை பயனுள்ள பொருட்களாக மாற்றுவது
குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி
அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி மேற்பார்வையாளர்களுக்கான செயல்
விளக்க பயிற்சி நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் 40 சதவீதம் காடுகளால்
சூழப்பட்டுள்ளது, கழிவுகள் சில காரணங்களால் காடுகளில் தேங்கும் சூழ்நிலை
ஏற்படுவதால் வன விலங்குகளின் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும்
கிராமத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அன்றைய தினமே நீக்கம்
செய்து கிராமத்தில் குப்பை சேகரிக்கும் பணியை மிக சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இருப்பினும் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்
பொழுது கையுறை, காலுறை போன்றவற்றை முறையாக
உபயோகப்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், அவர்கள்
நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்ய
வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் கிராமத்தில் சேகரிக்கும்
குப்பைகளை ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து அழித்து விடுகிறார்கள். அவ்வாறு
செய்யாமல் குப்பைகளை தரம் பிரித்து அதை உபயோகம் உள்ள வகையில் மாற்ற
வேண்டும். ஒவ்வொரு கிராமத்தில் இருப்பவர்களும் குப்பைகள் நீக்கம் செய்வதில்

தற்போது என்ன முறையை செயல்படுத்தி வருகிறார்கள், மேலும் வருங்காலத்தில்
என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், கழிவுகளை எவ்வாறு பயன்பாடு உள்ள
பொருட்களாக மாற்றலாம் என்பது குறித்தும் தன்னார்வலர்கள் பயிற்சி வழங்க
உள்ளார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பசுமை ஆலய திட்டம் சார்பில் அதன்
குறிக்கோள்கள், வரையறை, பசுமை ஆலயம் செயல்படுத்தல் திட்டம், அதன்
சவால்கள் மற்றும் பரிசீலனைகள், கழிவு கண்காணிப்பு திட்டம், முன்மாதிரி
கிராமங்கள் திட்டத்தின் கீழ் தனி மனித மேம்பாடு, சமூக மேம்பாடு, பொருளாதார
மேம்பாடு, சூழலியல் நிலைத்தன்மை, கிராம ஊராட்சி மேம்பாடு, பள்ளிகளில் சுகாதார
மேம்பாடு, குப்பை வங்கி ஆகியவற்றை குறித்தும், கிராமப்புற பகுதிகளை சுத்தம்
மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம், உத்திகள் மற்றும் தினசரி
செயல்படுத்துதல் ஆகியவற்றை குறித்து தன்னார்வலர்கள் செயல் விளக்க பயிற்சி
அளித்தார்கள்.

இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.உமாசங்கர், வட்டார
வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
ஓய்வு திரு.இளங்கோவன், ஈரோடு மாவட்ட பனை மர விதை நடும் திட்ட
ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறகுகள் அமைப்பு செயலாளர் திரு.விமல் கருப்பணன்,
பயிற்சியாளர்கள் திருமதி.திவ்யா ஜெயபிரகாஷ், திரு.கணேஷ் கார்த்திக் உட்பட துறை
சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares