திராவிட மாடல் கருத்தரங்கம்..திருக்குறள் கலைஞர் புஉரை த்தகத்தை வெளியிட்ட சிவா MLA !
திராவிட மாடல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் திமுக அமைப்பாளர் சிவா கலந்துகொண்டு திருக்குறள் கலைஞர் உரை புத்தகத்தை வெளியிட்டார்.
பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக தமிழனின் சுயமரியாதை தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா, திருக்குறள் கலைஞர் உரை நூல் அறிமுக விழா மற்றும் திராவிட மாடல் கருத்தரங்கம் தி.வி.க. தோழமை கூடல் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர். ஆனந்தி தலைமை தாங்கினார், பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர். பாரதி முன்னிலை வகித்தார், பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர். தூயவன் வரவேற்றார். தோழர் புஷ்பராஜ் மற்றும் தோழர். சுரேஷ் ஆகியோர் தொடக்கஉரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்கள் மற்றும் திராவிட விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி ஆகியோர் கலந்து கொண்டு திருக்குறள் கலைஞர் உரை நூலினை வெளியிட அதனை பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். தீனா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் கருத்துரையை கடலூர் பெரியார் சிந்தனையாளர் தோழர். வீ. அழகராசன் மற்றும் புதுச்சேரி மாநில திமுக பொருளாளர் திரு. இரா. செந்தில் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நூல் அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், அமுதா குமார், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்திரி ஸ்ரீகாந்த், தொகுதி பொருளாளர் சசிகுமார், கிளைக் கழக செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி ஆனந்த், விக்னேஷ், வினோத், நாகராஜ் மாணவரணி நியாஸ், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.