கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்..ம.தி.மு.க. தீர்மானம்!

Loading

கோவை மெட்ரோ ரெயில்திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டத் தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ம.தி.மு.க. கோவை மண்டல,செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. ம.தி.மு.க. மாநில அவைத்தலைவர் அர்ஜுன ராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலரு மான மக்கள் சேவகர் ஆர்.நாகராஜ் வரவேற்றார். அவை தலைவர் நேமிநா தன், பொருளாளர் நல்லூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டஎம்.எல். எப். செயலாளர் சக்திவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

( கூட்டத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., முன்னாள் எம்.பி. டாக்டர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி.கே.மணி
ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் கருவம்பாளையம் பகுதி செயலா ளர் விதைகள் சேகர் நன்றி கூறினார் கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில நிர்வாகிகள், கோவை. திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி 4 சட்ட தொகுப்புகளாக மாற் றியதை வாபஸ் பெறக்கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 17அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து வருகிற 9-ந் தேதி நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தம், மறியல் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது,

திருப்பூரில் 100 படுக்கையு டன் கூடிய இ.எஸ்.ஐ. மருத் துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மெட்ரோ ரெயில் திட்டம் கோவை மெட்ரோரெயில்.திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். அத்திக்க டவு-அவினாசி திட்டம் பேஸ்-2 ஆய்வு பணிகளை உடனே தொடங்கி திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மின்கட்டண உயர்வுக்கு எதிரானபோராட் டத்தில் கடந்த 1970-ம் ஆண்டு பங்கேற்று காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகள் ஆயிகவுண்டர், ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர் ஆகியோர் நினை வாகபெருமாநல்லூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சியில் மிக அதிகமாக உயர்த்தப் பட்ட சொத்துவரி, தொழில்வ ரியை குறைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடன டியாக வரியை குறைக்க வேண்டும். ஜவுளித்துறை மற் றும் பின்னலாடை துறையினர், எந்திர முதலீடுகளுக்கு 15 சதவீதம், மற்ற துறை எந்தி ரங்களுக்கு 10 சதவீதம் வட்டி மானியம் ஏடப்’ திட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் 31-3-2022 தேதியுடன் நிறுத்தப்பட்டது என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

 

 

0Shares