நல்லாளுமை விருது..மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அவர்களுக்கு வழங்கப்பட்டது.!
வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறைவரை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கண்ணாடிப்பாலம் அமைத்து,சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக நல்லாளுமை விருது – மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமிவிவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக திருவள்ளுவர் சிலையின்வலது பக்கத்திலிருந்து எதிரே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழைதரைத்தள நடைப்பாதை அமைப்பதற்கான ஆணையினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையிடம் ஒப்படைந்தார்கள்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியில் கடந்த2000ம் ஆண்டு, உலகமே போற்றுகின்ற விதத்திலே கன்னியாகுமரி கடலின் நடுவில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர்சிலை திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு 25 வருடம் நிறைவடைந்ததையொட்டி, அய்யன் திருவள்ளுவருக்கு விழாநடத்தியதோடு, கண்ணாடி பாலத்தினையும் விரைவாக முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுக்கும் அறிவுறுத்தியதின் படி, இரவு பகல் பாராமால் மாண்புமிகுபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், அரசுசெயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் பணியினை வேகமாக முடித்து, அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு
வெள்ளி விழா கொண்டாட்ட நாளன்று சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள்.
தற்போது இந்த கண்ணாடி பாலத்தினை பார்வையிட உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வருகை தந்து வருகின்றனர்.மேலும் கன்னியாகுமரி சுற்றுலாத்தளங்களில் இந்த கண்ணாடி பாலமானது முதன்மையாக விளங்கிவருவதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரியில் சுற்றுலா கட்டமைப்பான திருவள்ளுவர் சிலை முதல்விவேகானந்தர் பாறை வரை கண்ணாடிப்பாலம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக நல்லாளுமை விருதுமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர்மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப, அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அனைவருடைய அயராது உழைப்பையையும் பாராட்டும்
வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.08.2025 அன்று நடைபெற்ற 79வது சுதந்திர தினவிழாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் அவர்களுக்கு நல்லாளுமை (BestPractices Award) வழங்கி கௌரவித்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, அவர்கள் 15.08.2025 அன்றுமாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டுமையால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. அதனடிப்படையில் நேற்றைய தினம்(07.10.2025) சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப.,அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுக்கு மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட நல்லாளுமை விருதினை வழங்கினார்கள்.அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்தளத்திற்கு நல்லாளுமை விருதினை வழங்கியமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப,அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.மேலும் இக்கண்ணாடி பாலம் அமைவதற்காக இரவு பகல் பாராமால், பணியில் ஈடுப்பட்டநெடுஞ்சாலைத்துறை,சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், கன்னியாகுமரி நகராட்சி,மீன்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில்நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்கள்.