பொதுமக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற்றார்.
முதற்கட்டமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோவை கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்குவழித்தட மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.செந்தில்பாலாஜி, ஈ.ஆர்.ஈஸ்வரன், அமைச்சர். சு. முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், தலைமைப்பொறியாளர் (திட்டங்கள்) முனைவர் ஆர். கிருஷ்ணசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஜி.டி. நாயுடு அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.