குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றலாம்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

Loading

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக வலைத்தளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என 5 வகையான ரேஷன் அட்டைகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் பொருளில்லா அட்டை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்க முடியாது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் விட்டுக் கொடுக்கலாம்.

மேற்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares